almost 8 years ago by Manthri.lk - Research Team under in ஆய்வறிக்கை

 

2015 ஜனவரி 09 ஆந் திகதி மைத்திரிபால சிறிசேன இலங்கையின் 06 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக சத்தியப் பிரமானம் செய்தார். குறுகிய கால நிவாரணத்தினையும் நீண்டகால கட்டமைப்புரீதியான மறுசீரமைப்பினையும் முன்நிறுத்தி 100 நாள் நிகழ்ச்சித்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்ததன் மூலம் ஜனாதிபதி சிறிசேன அவர்களின் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த வாக்குறுதி ஜனாதிபதி சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் 100 நாட்களுக்குள் நிறைவு செய்யப்படுமென குறிப்பிடப்பட்டது. இவ்வாக்குறுதிகளில் பல தற்பொழுது நிறைவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, சில முக்கிய வாக்குறுதிகள் 730 நாட்;கள் கடந்ததன் பின்னரும் நிறைவு செய்யப்படாமலுள்ளன.

manthri.lk என்ற இணையத்தளத்தின் மைத்திரிமீற்றர்  என்ற பகுதி 100 நாள் நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் முன்னேற்றத்தினை அளவிடுகின்ற முறைமையொன்றாக ஏநசவைé ஆராய்ச்சி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டதுடன் '100 நாட்களுக்கு 100 புள்ளிகள்என புள்ளியிடப்படுகின்றது. 100 புள்ளியில் 50 இற்கு குறைந்த புள்ளியினைப் பெற்றிருந்த சந்தர்ப்பத்தில் 'தகவல் பெறுவதற்கான உரிமை' சட்டத்தினை செயற்படுத்தியமை போன்ற வாக்குறுதிகள் பல படிப்படியாக நிறைவேற்றப்பட்டதன் மூலம் மொத்தப்புள்ளி 71 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு செயற்படுத்தப்பட்டது வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் மிகவும் சொற்பமானவை என்பதுடன் தேர்தல் பிரச்சாரத்தில் மிக முக்கியமான வாக்குறுதியாகக் காணப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இல்லாதொழிப்பது தற்பொழுது இடம்பெற்றுவரும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் காணப்படுகின்றது. (அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஒரு பகுதியாக முன்வைக்கப்பட்டது). எவ்வாறாயினும், தேசிய கணக்காய்வு சட்டமூலம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கவிதிக் கோவையினை அறிமுகப்படுத்தல் ஆகிய இரண்டு பிரதான வாக்குறுதிகளும் குறிப்பிடத்தக்களவு தாமதமடைந்துள்ளது

ஜனாதிபதி சிறிசேன அவர்களின் அரசியல் விஞ்ஞாபனத்திற்கமைவாக அரச நிதியினை மேற்பார்வை செய்யும் பொறிமுறையினை வலுப்படுத்தும் நோக்கத்துடன் தேசிய கணக்காய்வு சட்டமூலத்தினை அறிமுகப்படுத்தல் 2015 பெப்ரவரி 19 ஆந் திகதிக்கு அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கு மேலதிகமாக, இச்சட்டமூலத்தினை அறிமுகப்படுத்துவது ஆட்சிக்குவந்த தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் பிரதான இரண்டு பாராளுமன்ற கூட்டமைப்புகளினதும் (நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி) விஞ்ஞாபனமாக காணப்பட்டது. எவ்வாறாயினும், அமைச்சரவையின் மூலம் குறித்த சட்டமூலத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் வரையறுக்கப்பட்டதாகவே காணப்பட்டது. ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனமானது பாராளுமன்ற உறுப்பினர்களினது ஒழுக்க விதிக்கோவையொன்றினை அமுல்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தல் மற்றும் அதனைப் பின்பற்றுதல் ஆகிய வாக்குறுதியினையும் கொண்டுள்ளது. நீண்ட காலதாமதத்தின் பின்னர் 'பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க விதிக் கோவை' 2016 டிசெம்பர் 10 ஆந் திகதி சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களினால் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டது. ஆயினும்கூட பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஒழுக்க விதிக்கோவையின் வரைவானது நடைமுறைப்படுத்தல் பொறிமுறையொன்றினை உறுதிப்படுத்துவதில் வரையறுத்து காணப்பட்டதுடன் உண்மையான வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் காணப்பட்டது. ஓழுக்கவிதிக் கோவையொன்றினை அமுல்படுத்த வேண்டியது உண்மையில் 2015 பெப்ரவரி 2 ஆம் திகதியென திட்டமிடப்பட்டிருந்தது.

இவ்வாறான குறைபாடுகள் காணப்பட்ட போதிலும், தகவல் அறியும் உரிமை சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டது போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், ) ஊழல் மோசடியினை விசாரிப்பதற்கான ஆணைக்குழுக்கள், ) சுயாதீன ஆணைக்குழுக்கள், மற்றும் ) அரசியலமைப்புச் சபை மற்றும் தேசிய மருந்துப் பொருட்கள் கொள்கையினை  பின்பற்றுகின்றமை போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். இவற்றுள் 2016 ஜூன் 24 ஆந் திகதி தகவல் அறியும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டதுடன் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு தாபிக்கப்பட்டதும் எடுத்துக் காட்டப்பட வேண்டிய அம்சமாகும். இச் சட்டமூலத்தின் நோக்கமானது வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றினை அதிகரிக்கும் நோக்கத்துடன் தகவல் அறியும் உரிமையினை வழங்குவதாகும்.

பொதுவாக, தற்பொழுது நீண்டகாலம் கடந்துவிட்ட 100 நாள் நிகழ்ச்சித்திட்டத்தினை நிறைவு செயவதானது இரண்டு விடயங்களில் தங்கியுள்ளது. முதலாவது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இல்லாதாக்கும் செயன்முறை மற்றும் புதிய தேர்தல் முறைமையினை ஏற்படுத்தல் என்பன அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையின் விளைவுடன் தொடர்புற்றுக் காணப்படுகின்றது. இரண்டாவது, 'நல்லாட்சி அரசு' வழங்கிய வாக்குறுதிகளில் மிகவும் குறிப்பிடத்தக்க இலகுவாக அடைந்துகொள்ள முடியுமானவற்றின் முன்னேற்றம். அதாவது, தேசிய கணக்காய்வு ஆணைக்குழு (கணக்காய்வு சட்டமூலத்தின் ஊடாக) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க விதிக்கோவையினை சட்டபூர்வமாக நடைமுறைப்படுத்தல் ஆகிய இரண்டும் ஜனாதிபதி சிறிசேன அவர்களின் அரசாங்கத்தின் இரண்டு வருடங்களாக எவ்வித முடிவுமின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது.