இன்னொரு கட்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தாவிச் செல்வதனால் வாக்காளர்களின் உண்மையான எண்ணத்திற்கு இடையூறு விளைவிக்கப்படும் என்பது இலங்கையில் ஒரு பாரதூரப் பிரச்சினையாக உள்ளது. இந்தப் பிரச்சனையின் அளவு எத்தகையது? கட்சித் தாவல் பாராளுமன்றத்தில் பா.உ க்களின் பங்களிப்பை மேம்படுத்த உதவுகிறதா? பாராளுமன்றத்தில் நடைபெறும் அனைத்துச் செயற்பாடுகளையும் அவற்றின் பங்கேற்பாளர்களையும் கண்காணித்து தர வரிசைப்படுத்தும் ஓர் இணையத்தள மேடையாகிய Manthri.lk இக் கேள்விகளுக்கு விடை காண உதவுகிறது.
கட்சித் தாவல்களை கணக்கிடுதல்: தற்போதைய பாராளுமன்றத்தில் கட்சித் தாவல்கள் 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போதிருந்த 64% (144 ஆசனங்கள்) லிருந்து தற்போது 72.4% (163 ஆசனங்கள்) ஆக அரசாங்கத்தின் ஆதரவு வளர்ச்சியுற உதவியுள்ளது. தேர்தலின் பின்னர், எதிர்க் கட்சியைச் சார்ந்த 23% மான பா.உ க்கள் கட்சித் தாவியதாலேயே இது ஏற்பட்டது.
அதாவது மொத்தமாக 20 பா.உ க்கள் கட்சித் தாவியுள்ளனர். அதில் கிட்டத்தட்ட அரைவாசியினர் இலங்கை முஸ்லிம் காங்கிறஸ் (8 பா.உக்கள்) – ஐ.தெ.மு கூட்டணியிலிருந்தும் அரைவாசிக்கு சிறிது அதிகமானவர்கள் (11 பா.உ க்கள்) ஐதேக இருந்தும் கட்சித் தாவியுள்ளனர். அவர்களுள் ஒருவரான ஸ்ரீ.லமுகா கட்சியிலிருந்து சென்ற நூர்தீன் மசுர் காலமாகிவிட்டார்.
கட்சிதாவியவர்களின் செயலாற்றுகை சராசரிக்குக் கீழே: தற்போதைய பா.உ.களுள் 8.4% மானோர் கட்சித் தாவியவர்களாவிருந்தபோதிலும், இப் பா.உ. கள் 2.7% மான பாராளுமன்ற பயன்மிக்க செயற்பாடுகளிலேயே பங்குபற்றியுள்ளனர். Manthri.lk இன் 23 மாதகால (மே 2012 முதல் மார்ச் 2014 வரை) தரவுகள் (காலஞ்சென்ற) நுர்தீன் மசூரை விடுத்து கட்சித்தாவிய பா.உ. களின் சராசரி பயன்மிக்க பங்களிப்பானது பட்சித்தாவாதவர்களின் சராசரி பங்களிப்பின் மூன்றிலொரு பங்காகவே உள்ளதென்பதை காட்டுகின்றன ( காட்சி 2).
கட்சித் தாவியவர்களில் இரண்டுபேர் மட்டுமே சராசரி கட்சித் தாவாதவர்களைவிட சிறப்பாக செயற்பட்டுள்ளனர். அவர்கள் நீதி அமைச்சரான ரவூக் ஹக்கீமும் ஸ்ரீரங்கா ஜெயரட்னமுமாகும். தேர்தலின் பின்னர் அரசாங்கத் தரப்பிற்கு கட்சித் தாவிச் சென்று அதன் பின்னர் தற்போது ஒரு சுயேட்சையான பா.உ ஆக அமர்ந்திருக்கிறார் (காட்சி 3)
கட்சி; தாவும் பா.உ. கள் சிறப்பான பங்களிப்பாற்றுவதற்காகவே தாம் அவ்வாறு செய்வதாக அடிக்கடி கூறுகின்றனர். எனினும் பாராளுமன்றப் பங்களிப்பைப் பொறுத்தவரை அதற்கு மாறான நிலையே உள்ளது. கட்சித் தாவல் வாக்களர்கள் அவர்கள்மீது வைத்த நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்யும் செயலா? அல்லது கட்சித் தாவல்களை அனுமதிப்பதற்கு சிறந்த காரணம் ஒன்று உண்டா? உங்கள் கருத்துகளை Manthri.lk ஓடு www.manthri.lk/en/blog மூலம்;; அல்லது 071-4639882 எனும் இலக்கத்திற்கு குறுஞ் செய்தி அனுப்புவதன் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்.